நிறுத்தப்பட்ட ‘அரசன்’ படப்பிடிப்பு: “சிம்புக்காக வரவில்லை ஆனால்…" – கொந்தளிக்கும் டி.ராஜேந்தர்


சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ உலகத்தை மையமாகக் கொண்ட கதையாக அரசன் படம் உருவாகிறது. அனிருத் இசையில், தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு நடிகர் சிம்புவுக்கும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் இடையிலான பிரச்னைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், சிம்பு நடிக்கும் ஒரு விளம்பரப் படப்பிடிப்பும் இதே காரணத்தால் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரங்கள் திரையுலகில் விவாதமான நிலையில், நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “’அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது ஏன்? நிறுத்தியது யார்? நிறுத்த சொன்னது யார்? நியாயம் கேட்க வருகிறார் இந்த டி.ஆர்.,

அரசன் - சிம்பு - வெற்றிமாறன்
அரசன் – சிம்பு – வெற்றிமாறன்

அரசனுக்காகவோ, சிலம்பரசனுக்காகவோ வாதாடுவதற்காக நான் வரவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், அதற்கு துணையாக நிற்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் அறம்தவறி நடந்துவிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டவே நான் வருகின்றேன். ஆம் சிலம்பரசன் நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தை எடுத்த மரியாதைக்குரிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள், சிலம்பரசனுக்கு எதிராக வழக்கு மன்றத்துக்கு சென்றார். வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கிலே சிலம்பரசன் சார்பாக சட்டப்படி உரிமை பெற்ற, அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியாக நான் வழக்கு மன்றத்திற்கு சென்று மாண்புமிகு நீதிமன்றத்திற்கு முன் நின்று போராடி முறைப்படி வென்றும் வந்திருக்கின்றோம். அந்த வழக்கிலே மாண்புமிகு மரியாதைக்குரிய நீதிமன்றம் வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து இரண்டாவது படத்துக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் சிலம்பரசனையே போய் சாரும் என்று ஒரு தீர்ப்பையும் வழங்கி இருக்கின்றார்கள். அந்த தீர்ப்புக்கான நகலும் எங்கள் கையிலே இருக்கிறது.

ஐசரி கே. கணேஷ்

இப்படிப்பட்ட இந்த தருணத்திலே அந்தப் பழைய வழக்கை எடுத்து வைத்துக்கொண்டு, நம்முடைய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், அதற்கு துணையாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் சேர்ந்து இன்றைக்கு அரசன் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்ற ஒரு செய்தி வருகிறது. இதை பார்க்கின்ற போது நான் கேட்க விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

ஒரு தயாரிப்பாளருக்காக போராடுவதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமும் நிற்கின்ற போது, ஒரு திரைப்பட நடிகருக்காக, போராடுவதற்காக தென் இந்திய நடிகர் சங்கமும் ஏன் நிற்கக்கூடாது? நிற்க வேண்டும். அவர்களும் போராட வேண்டும். உரிமையை பெற்று தரவேண்டும். நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஒரு சுமூகமான தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றேன்.

சிம்பு
சிம்பு

அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கக்கூடிய இந்த காலகட்டத்திலே நீதிமன்றத்தால் ஒரு வழக்கிலே தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும், நாங்கள் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு படத்தை நிறுத்துவோம் என்று நிறுத்தி காட்டி இருக்கிறார்களே இது நியாயமா? என்று கேள்வி கேட்கவும் விரும்புகின்றேன். இதன் தொடர்பாக விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் இருக்கின்றேன் என்பதையும் இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Thank You

Related Posts

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. நட்பு பாடல் – மதன் கார்க்கி இன்றைய பகுதிக்கு, ‘ஆர்.ஆர்.ஆர்’…

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 1:34 PM IST விளம்பரங்கள், தயாரிப்பு உறைகள் மற்றும் இணையதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார். செய்தி18 பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 9 views
மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 10 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 7 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }