கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் ‘ரெட்ரோ’. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கருப்பு’. இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். மலையாள நடிகர் இந்திரன்ஸ், சுவாசிகா, ஷிவதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் படப் பணிகள் நிறைவடைந்த நிலையில், படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில் படம் வரும் மே மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘விஸ்வநாதன் அன் சன்ஸ்’ படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து ‘ஆவேசம்’ பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் 3 படங்கள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.