கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. இந்தப் படத்தில் மீனா, எஸ்தர் அனில் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனால் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.75 கோடியை வசூலித்து மிரட்டியது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு ‘த்ரிஷ்யம் 2’ வெளியானது. மோகன்லால், மீனா உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த அதே குழுவினர் இதிலும் நடித்தனர். இந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஜீத்து ஜோசப் – மோகன்லால் கூட்டணியில் ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம், வரும் ஏப்ரல் 9-ம் தேதி கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் ‘த்ரிஷ்யம் 3’படத்தை வெளியிட்டால் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 18, 2026 12:14 PM IST