– விளம்பரம் –
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்ததோடு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்களிலும் சென்னை அணி தோல்வியை சந்திக்க நட்சத்திர வீரர்கள் பலர் இடம்பெறாதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போதுள்ள சி.எஸ்.கே அணியில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தவிர பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லை.
பிரேவிஸ் எப்போது அணிக்கு திரும்புவார் : ஸ்டீபன் பிளமிங் பதில்
தோனி, நாதன் எல்லீஸ், பிரேவிஸ் போன்ற வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாதது அந்த அணிக்கு பெரிய சிக்கலை தந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் அவர்கள் வரும் வரை சென்னை அணியின் இந்த சரிவு தொடரும் என்று பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வேளையில் இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளை தவறவிட்ட அதிரடி வீரரான பிரேவிஸ் எப்போது மீண்டும் சி.எஸ்.கே அணிக்கு திரும்புவார்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.
– விளம்பரம் –
ஏனெனில் பிரேவிஸ் சி.எஸ்.கே அணியின் மிடில் ஆர்டருக்கு வரும்போது சி.எஸ்.கே அணியின் பேட்டிங் ஆர்டர் நிச்சயம் பலப்படும். இதன் காரணமாக அவரது வருகை சி.எஸ்.கே அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் மூன்று போட்டிகளை காயம் காரணமாக தவறவிட்ட அவர் எப்போது மீண்டும் அணிக்கு திரும்புவார்? என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் தனது பதிலை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : டேவால்டு பிரேவிஸ் நிச்சயம் அடுத்த போட்டிக்கு முன்பாக தயாராகி விடுவார் என்று நம்புகிறோம். அடுத்த ஆட்டத்திற்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன. எனவே இந்த விஷயத்தில் நாங்கள் எச்சரிக்கையாக இருந்து வருகிறோம். இந்த ஐந்து நாட்களும் திட்டமிட்டபடியே சரியாக எல்லாம் நடந்து அவர் மீண்டும் விளையாட வந்து விடுவார் என்று நினைக்கிறோம்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : ஆஸ்திரேலிய வாரியத்தின் கெடுபிடியால் அடுத்த 3 போட்டிகளை தவறவிடும் மிட்சல் ஸ்டார்க் – விவரம் இதோ
அவர் இல்லாதது எங்கள் அணியின் பேட்டிங் ஆர்டரில் ஒரு பெரிய இழப்புதான். நிச்சயம் அவரது வருகையை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் நிச்சயம் டேவால்டு பிரேவிஸ் அடுத்ததாக நடைபெறவுள்ள டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.
விளம்பரம்