– விளம்பரம் –
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அகமதாபாத் நகரில் நடைபெற்ற 2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக எதிர்வரும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்திய அணிக்குள் அவரை கொண்டு வாங்க : சோயிப் அக்தர்
ஆனால் தற்போதைய இந்திய அணி சற்று சுமாரான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கடினம் என்று பலரும் கூறி வருகின்றார். இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தோல்விக்கு காரணமே இந்திய அணியில் சரியான பந்துவீச்சு கூட்டணி இல்லாதது தான் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
– விளம்பரம் –
அந்த வகையில் அவர் கூறியதாவது : ஹார்டிக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே போன்ற வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் தான் பந்து வீசினார்கள். இவர்கள் வலிமையான தென்னாப்பிரிக்கா யூனிட்டை அச்சுறுத்தக்கூடிய வீரர்கள் கிடையாது. இந்த வேகத்தில் வீசினால் நிச்சயம் எந்த அணியிடமும் இந்திய அணி சிக்கலை தான் சந்திக்கும்.
அதேபோன்று வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை எதிர்த்தும் தென்னாப்பிரிக்க வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர். அவரை முன்கூட்டியே கணித்து அவரது ஓவரிலும் அதிரடியாக விளையாடியதால் தென்னாப்பிரிக்க அணி பெரிய ரன் குவிப்பை நோக்கி சென்றது. தற்போதைய இந்திய அணியில் பும்ராவை தவிர்த்து வேறு எந்த பந்துவீச்சாளரிடமும் தாக்கம் இல்லை.
– விளம்பரம் –
இதையும் படிங்க : அவர் ஒரு ஆல்ரவுண்டரே கிடையாது.. அவரோட ஓவர்ல 4 சிக்ஸர் கூட ஈஸியா அடிக்கலாம் – முகமது கைப் விளாசல்
எனவே காற்றில் பேட்ஸ்மேன்களை ஏமாற்றி சுழற்பந்து வீசும் விக்கெட் டேக்கிங் பவுலரான குல்தீப் யாதவை நாம் யோசித்து பார்க்க வேண்டும். அவர்தான் தற்போதைய இந்திய அணியின் திறமையான ஸ்பின்னர் அவரை உள்ளே கொண்டு வந்து விளையாட வைத்தால் தான் எதிரணியின் ரன் குவிப்பை தடுக்க முடியும் என சோயிப் அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்