இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியானது மார்ச் 5-ஆம் தேதியான நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த போட்டி ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியை எச்சரித்த இங்கிலாந்து வீரர் : சாம் கரன்
இந்நிலையில் மிக முக்கியமான இந்த அரையிறுதி போட்டிக்கு முன்பாக பேசியுள்ள இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் வான்கடே மைதானத்தில் இருக்கும் இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதே எங்களுடைய இலக்கு என்று அதிரடியான சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
இலங்கையில் இருந்து மும்பைக்கு பயணம் செய்யும்போது எனது சிறு வயது கனவுகள் குறித்தும் கிரிக்கெட்டில் நான் எதை சாதிக்க விரும்புகிறேன்? என்பது குறித்தும் யோசித்து பார்த்தேன். இந்தியாவில் வைத்து இந்திய அணியை மிகப்பெரிய போட்டியில் வீழ்த்த வேண்டும் என்பதுதான் எனது கனவுகளில் முதன்மையான ஒன்று.
அந்தவகையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த மாபெரும் அரையிறுதி போட்டியில் நிச்சயம் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்திய அணிக்கு அங்கு பெருமளவில் ஆதரவும் இருக்கும். ஆனால் இந்திய மைதானங்களில் நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளதால் இந்த சத்தத்தை காதில் வாங்கிக் கொள்ளாமல் எப்படி விளையாட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
இதையும் படிங்க : கவனமா இருங்க.. இல்லன்னா முடிவு மாறிடும்.. தென்னாப்பிரிக்க அணியை எச்சரித்த – ரவி சாஸ்திரி
மேலும் இங்குள்ள ரசிகர்களை அமைதியாக்கி நாங்கள் இறுதி போட்டிக்கு செல்ல இன்னும் ஒரு அடி மட்டுமே எடுத்து வைக்க வேண்டும். அந்த வகையில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சாம் கரன் கூறியது குறிப்பிடத்தக்கது.
பதவி பேட் கம்மின்ஸ் பாணியில் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்த சாம் கரன் – விவரம் இதோ முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.