Song – Naan Pizhai
Movie – Kaathuvaakula Rendu Kadhal
Composed by Anirudh Ravichander
Lyrics – Vignesh Shivan
Vocals – Ravi G & Shashaa Tirupati
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை
நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை
ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே
அடி அழகா
சிரிச்ச முகமே
நா நெனச்சா
தோணும் இடமே
அடி அழகா
சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே
ஓ ஓ
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை
நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை
அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடை முறையை
ரசிக்கும் ரசிகனும் ஆனேன்
அவன் அருகினிலே
கனல் மேல் பனி துளி ஆனேன்
அவன் அணுகயிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்
அவளோடிருக்கும்
ஒரு வித சிநேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த
ஒரு வகை சேவகன் ஆனேன்
ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே
அடி அழகா
சிரிச்ச முகமே
நா நெனச்சா
தோணும் இடமே
அடி அழகா
சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே
ஓ ஓ
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை
நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை