ஐ.பி.எல் போட்டிகளால் தான் என்னுடைய சர்வதேச கரியர் முடிவுக்கு வந்தது





கெவின் பீட்டர்சன்


– விளம்பரம் –

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி 2014 ஆம் ஆண்டு வரை 104 டெஸ்ட் போட்டிகள், 136 ஒருநாள் போட்டிகள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் போட்டிகளிலும் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 36 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரால் என்னுடைய சர்வதேச கரியர் முடிவுக்கு வந்தது : பீட்டர்சன்

சர்வதேச போட்டிகளில் அதிரடியான வீரராக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கெவின் பீட்டர்சன் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக பயிற்சியாளர் குழுவில் இருந்த அவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தனது சர்வதேச கிரிக்கெட் கரியர் ஐபிஎல் தொடரால் தான் முடிவுக்கு வந்தது என அவர் அளித்துள்ள ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

– விளம்பரம் –

அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் ஐபிஎல் போட்டிகளில் விளையாட பெரிய தியாகங்களை செய்தேன். அதனால் தான் என்னுடைய கரியரையும் இழந்தேன். ஏனெனில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் இருந்த அனைவரும் எனக்கு எதிராக இருந்தார்கள். நான் 33 வயதில் 104 டெஸ்ட் போட்டிகளோடு என்னுடைய கரியரை முடித்துக் கொள்ள நேர்ந்தது. நான் நிச்சயம் 150 முதல் 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,000 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் இங்கிலாந்து வாரியம் கொடுத்த அழுத்தம் தான் என்னுடைய கரியரை முடிவுக்கு கொண்டு வந்தேன். தற்போது நான் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறேன். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க சீசனில் இங்கிலாந்து வாரியத்துடன் ஒப்பந்தம் செய்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடை விதித்திருந்தது. அதேபோன்று அடுத்த ஆண்டு மூன்று வாரங்கள் மட்டுமே இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்பட்டது.

– விளம்பரம் –

இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? மனம்திறந்த ரவிச்சந்திரன் அஷ்வின் – விவரம் இதோ

இப்படி பல்வேறு கெடுபிடிகள் எங்களுக்கு இருந்தன. ஆனால் நான் அதையெல்லாம் மீறி ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்ததால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எனக்கு தனிப்பட்ட வகையில் நெருக்கடியை ஏற்படுத்தி என்னுடைய கரியரை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் கெவின் பீட்டர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

திருப்பி அடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்.. பவர்பிளே ஓவர்களில் இரண்டாவது அணியாக நிகழ்த்திய

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டியானது இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அக்சர் பட்டேல்…

கப்ல அவங்க பேரை எழுதுங்கப்பா.. பஞ்சாப் கிங்ஸ் அணி செய்த முரட்டு சம்பவம்

– விளம்பரம் – இந்தியாவில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 35 ஆவது லீக் போட்டியானது இன்று டெல்லி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

திருப்பி அடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்.. பவர்பிளே ஓவர்களில் இரண்டாவது அணியாக நிகழ்த்திய

  • By admin
  • April 26, 2026
  • 11 views
திருப்பி அடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்.. பவர்பிளே ஓவர்களில் இரண்டாவது அணியாக நிகழ்த்திய

கப்ல அவங்க பேரை எழுதுங்கப்பா.. பஞ்சாப் கிங்ஸ் அணி செய்த முரட்டு சம்பவம்

  • By admin
  • April 26, 2026
  • 5 views
கப்ல அவங்க பேரை எழுதுங்கப்பா.. பஞ்சாப் கிங்ஸ் அணி செய்த முரட்டு சம்பவம்

LONER- அதிகாரப்பூர்வ வீடியோ பாடல் | அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் | அடிக்ரிஸ் – அஹதமிழ்

  • By admin
  • April 26, 2026
  • 12 views
LONER- அதிகாரப்பூர்வ வீடியோ பாடல் | அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் | அடிக்ரிஸ் – அஹதமிழ்

கர்நாடகாவின் சகலா: பொது சேவைகளை புரட்சிகரமாக்குகிறது – TN செய்திகள்

  • By admin
  • April 26, 2026
  • 4 views
கர்நாடகாவின் சகலா: பொது சேவைகளை புரட்சிகரமாக்குகிறது – TN செய்திகள்

இப்படி நடந்தா எவ்ளோ ரன்ஸ் அடிச்சாலும் தோக்க வேண்டியது தான்.. வருத்தத்தை வெளிப்டுத்திய – அக்சர் படேல்

  • By admin
  • April 25, 2026
  • 5 views
இப்படி நடந்தா எவ்ளோ ரன்ஸ் அடிச்சாலும் தோக்க வேண்டியது தான்.. வருத்தத்தை வெளிப்டுத்திய – அக்சர் படேல்

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே – 3 – Kumudam

  • By admin
  • April 25, 2026
  • 13 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே – 3 – Kumudam
.site-info { display: none; }