“கேரளா ஸ்டோரி 2” திரைப்படத்தை நீதிபதிகள் பார்த்து முடிவு செய்வார்கள்:  கேரள உயர்நீதிமன்றம்  – Kumudam

கேரளா ஸ்டோரி 2″ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், கேரளா உயர்நீதிமன்றம் இன்று முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது. திரைப்படத்தின் ட்ரெய்லர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாகச் சித்தரிப்பதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் உள்ளதாகவும் கூறி தொடரப்பட்ட மூன்று பொதுநல வழக்குகளை நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் விசாரித்தார்.

விசாரணையின் போது நீதிபதி, “கேரளா ஒரு மதச்சார்பற்ற மாநிலம்; இங்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த மாநிலத்திலும் ஏதோ அசம்பாவிதம் நடப்பது போன்ற பிம்பத்தை உருவாக்குவது தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும். இதை தணிக்கை வாரியம் கவனிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், படத்தின் தலைப்பிலேயே மாநிலத்தின் பெயர் இடம் பெற்றிருப்பதால், மக்களின் அச்சத்தைப் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் காட்டப்படும் சம்பவங்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சார்ந்தவையாக இருந்தாலும், ‘கேரளா’ என்ற பெயரில் சித்தரிப்பது தவறானது என்று வாதாடினார். இதற்குப் பதிலளித்த படக்குழுவினர், டீசரில் உள்ள சில காட்சிகள் திரைப்படத்தில் இடம் பெறவில்லை என்று விளக்கம் அளித்தனர்.

கலைச் சுதந்திரத்தில் பொதுவாகத் தலையிட விரும்பவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, அதே சமயம் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் படம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார். அதன் அடிப்படையில், நாளை (பிப்ரவரி 25) நீதிபதிகள் முன்னிலையில் இப்படத்தைச் சிறப்புத் திரையிடல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பின்னரே தணிக்கைச் சான்றிதழ் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Thank You

Related Posts

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

NEW QUESTION 1 – (Exam Topic 1) A security analyst needs to implement an MDM solution for BYOD users that will allow the company to retain control over company emails…

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

இன்று காலை சென்னை சென்ட்ரல் – தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அப்போது, அரசின் நலத்திடங்கள் குறித்து பயணிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு ஆதரவு தருமாறு மெட்ரோ பயணிகளிடம் வாக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 9 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 6 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 6 views

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்
.site-info { display: none; }