ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: உதயநிதி மீது குற்றச்சாட்டு; ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?


தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இன்று காலை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். இதற்கிடையில், செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது, “அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க அரசு மீதும், தலைவர்கள் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். அவர் தோல்வி பயத்தில் இருக்கிறார். அந்த விரக்தியின் காரணமாகவே அவர் தொடர்ந்து அவதூறான கருத்துகளைப் பேசி வருகிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எப்போதுமே தமிழ்நாட்டில் போட்டி என்பது தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையேதான். ஆனால், தற்போது பிஜேபி நேரடியாக வர முடியாமல் அ.தி.மு.க-வின் முகமூடியைப் போட்டுக்கொண்டு உள்ளே நுழையப் பார்க்கிறது. இதுதான் உண்மை நிலை.

நான் எங்குச் சென்றாலும் காலையில் நடப்பது எனது வழக்கம். இப்போது தேர்தல் காலம் என்பதால், மக்கள் என்னை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்துகிறார்கள். ‘உங்களுக்குத்தான் எங்கள் வாக்கு’ என்று மக்கள் உறுதியளிப்பது எனக்கு கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது. அதனால் வழக்கத்தை விடச் சற்று அதிகமாகவே நடக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் போட்டி தி.மு.க-வுக்கும் த.வெ.க-வுக்கும்தான் என்று கூறி வருவது குறித்த கேட்டதற்கு, “இதற்கு No Comments” என்று முதல்வர் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

அதேபோல், ஜன நாயகம்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, “அதைப் பற்றி எனக்குத் தெரியாது, அந்தப் புகார்களை நான் படிக்கவில்லை. இதுபோன்ற விவகாரங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.



Thank You

Related Posts

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. நட்பு பாடல் – மதன் கார்க்கி இன்றைய பகுதிக்கு, ‘ஆர்.ஆர்.ஆர்’…

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 1:34 PM IST விளம்பரங்கள், தயாரிப்பு உறைகள் மற்றும் இணையதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார். செய்தி18 பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 6 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 4 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 6 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

  • By admin
  • April 20, 2026
  • 11 views
Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 11 views
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }