– விளம்பரம் –
நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 48-வது போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதிவரும் வேளையில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியானது முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை பரவசப்படுத்தியது.
மெகா சாதனையை நிகழ்த்திய இந்திய அணி :
அதன்படி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்து அசத்தியது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 55 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.
– விளம்பரம் –
பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கினை நோக்கி தற்போது ஜிம்பாப்வே அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி அடித்த இந்த 256 ரன்கள் மூலம் சர்வதேச டி20 உலககோப்பை போட்டிகளில் இரண்டாவது அணியாக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதுவரை சர்வதேச டி20 உலக கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை அடித்த அணியாக ஸ்ரீலங்கா அணி முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது கென்யா அணிக்கு எதிராக இலங்கை அணி அடித்த 260 ரன்களே இதுவரை சர்வதேச டி20 உலக கோப்பை போட்டிகளில் அதிகபட்ச அதிக ரன்கள் இருந்து வருகிறது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் – கேப்டன் அறிவிப்பு
அந்த சாதனையை இந்திய அணி வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தவறவிட்டு அதிக ரன்களை அடித்த இரண்டாவது அணியாக தங்களது பெயரை பதிவு செய்துள்ளது. அதுமட்டும் இன்றி நடப்பு 2026 டி20 உலககோப்பை தொடரில் அதிக ரன்களாக வெஸ்ட் இண்டீஸ் அணி 254 ரன்கள் அடித்திருந்த வேளையில் அந்த சாதனையை கடந்து நடப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்த அணியாக இந்திய அணி தங்களது பெயரை பதிவு செய்துள்ளது.
விளம்பரம்