Rashmika Mandanna warning to Vijay Deverakonda : விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அறிமுகமான புதிதில் ராஷ்மிகா, விஜய்க்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார்.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் செய்து கொண்டனர். பிப்ரவரி 26 அன்று உதய்பூரில் குடும்பத்தினர், சில பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இவர்கள் காதலித்தது அனைவரும் அறிந்ததே.
பரசுராம் இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் பேனரில் அல்லு அர்விந்த் வழங்கிய இப்படம் பிளாக்பஸ்டர் ஆனது. ராஷ்மிகா, விஜய் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் தொடங்கிய நட்பு காதலாக மாறியது.
விஜய், ராஷ்மிகா குறித்த சுவாரஸ்யங்களை ரசிகர்கள் நினைவு கூறுகின்றனர். ராஷ்மிகா விஜய்க்கு கொடுத்த முதல் வார்னிங் பற்றி பேசுகின்றனர். அர்ஜுன் ரெட்டி பட சமயத்தில் விஜய்யின் பேச்சு சர்ச்சையானது.
ஆனால் கீதா கோவிந்தம் குடும்ப பார்வையாளர்களுக்கான படம். அதனால் விஜய் சர்ச்சையாக பேசாமல் படக்குழு பார்த்துக் கொண்டது. தனக்கு பலர் வார்னிங் கொடுத்ததாக ப்ரீ ரிலீஸ் விழாவில் விஜய் கூறினார்.
தன்னை எச்சரித்தவர்களில் ராஷ்மிகா மேடமும் ஒருவர் என விஜய் கூறினார். பன்னி வாசு, பரசுராம் எச்சரித்ததாகவும், அல்லு அர்விந்த் போன் செய்து கவனமாக பேச சொன்னதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.