– விளம்பரம் –
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் 52-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை : சூரியகுமார் யாதவ்
ஏற்கனவே இந்த சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணி ஜிம்பாப்வே அணியிடம் வெற்றி பெற்றது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் என்பதனால் இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
– விளம்பரம் –
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக ஏதாவது மாற்றங்கள் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என டாசின் போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நல்ல துவக்கத்தை கண்டதாலும் எளிதாக வெற்றியை பெற்றதாலும் இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இல்லை என்று தெரிகிறது.
இந்த போட்டியில் டாசுக்கு பிறகு சூரியகுமார் யாதவ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் முதல் பந்து வீசவே விரும்புகிறோம். ஏனெனில் இந்த மைதானம் சேசிங்கிற்கு உகந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேபோன்று இரண்டாம் பாதியில் டியூ இருக்கும் என்று நினைக்கிறன். இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும் கேப்டன் அறிவித்தார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : நம்பர் 1 பவுலர் தான்.. ஆனாலும் எங்ககிட்ட பக்கா பிளான் ரெடியா இருக்கு – டேரன் சமி பேச்சு
1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) திலக் வர்மா, 7) சிவம் துபே, 8) அக்சர் படேல், 9) அர்ஷ்தீப் சிங், 10) வருண் சக்கரவர்த்தி, 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.
விளம்பரம்