”அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் Gainer, இல்லையென்றால் loser” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் Gainer, இல்லையென்றால் loser” எனத் தெரிவித்தார்.

செய்தி18
செய்தி18

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போதுவரை தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தவெக விஜய் மற்றும் நாதக சீமான் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இதில் கடந்த ஞாயிறு அன்று தவெக தலைவர் விஜய், கரூர் அசாம்பாவிதம் தொடர்பாக சிபிஐ வழக்கு விசாரணைக்கு டெல்லி சென்றார். அதற்கு முன் தினமான சனிக்கிழமையில் இருந்து, என்.டி.ஏ. கூட்டணியில் விஜய்யை இணைக்க முயற்சி என தகவல்கள் வெளியாகிவந்தன.

குறிப்பாக சனிக்கிழமை திடீரென தவெக மாவட்டச் செயலாளர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் கூட்டினார். இதில் பங்கேற்ற பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் என்.டி.ஏ. கூட்டணியில் இணை இசைவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து ஞாயிறு அன்று சிபிஐ விசாரணை முடிந்து தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பினார். பின்னர் கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவித்த அக்கட்சி நிர்வாகி நிர்மல் குமார், “பாஜக, அதிமுக அல்லது சசிகலா, ராமதாஸ் ஆகியோரை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதேபோல், நேற்று சென்னையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி“கூட்டணியில் புதிய கட்சிகள் வருவதான வாய்ப்பும், சூழலும் இருக்கிறது. அதிமுகவும், என்.டி.ஏ. கூட்டணி தலைவர்களும் தவெகவுடன் இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “எங்கள் பொதுச் செயலாளர் அப்படியான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என தெளிவுப்படுத்திவிட்டார். இருந்தாலும், அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் அவர் Gainer; இல்லையென்றால் loser. Gainer-ஆ loser-ஆ என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.



Thank You

Related Posts

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 10:09 PM IST திருச்சி விமான நிலையம் அருகே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர முயன்றகூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர் செய்தி18 திருச்சி கிழக்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய்,…

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – மதுகேசவ் பொற்கண்ணன் எவரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும். ஒருவர் பெற்றத் திறமை மற்றவரிடம் இல்லை என்பதற்காக அவரைக் குறைவாக எண்ணக்கூடாது. அவரவர்க்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 9 views
மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 10 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 7 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }