முரசொலி அறக்கட்டளை தொடர்பான வழக்கு… சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

முரசொலி அறக்கட்டளையால் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் விளம்பரம் என்ற பெயரில் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் முரசொலி அறக்கட்டளை சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் முரசொலி அறக்கட்டளை சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டதாகவும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை உத்தரவிடக்கோரி திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து முரசொலி அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக ஏற்கனவே புகார் உள்ளதாக கூறினார். மேலும், முரசொலி அறக்கட்டளையால் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் விளம்பரம் என்ற பெயரில் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக கூறப்படும் புகார் தொடர்பாக நீதிமன்றம் எதுவும் கூறவில்லை எனவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் எனக்கூறி பொதுநல தாக்கல் செய்துள்ள வெங்கடாசலபதி திருநெல்வேலி மாவட்ட பாஜக நிர்வாகி என்றும் உண்மையை மறைத்து அரசியல் காரணங்களுக்காக இந்த மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறினார். மேலும், தற்போதைய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக இருந்த போது அவரது தூண்டுதலின் பேரில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக போலி புகார் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, மனு குறித்து சிபிஐ, தேசிய தாழ்த்தப்பட்ட்டோர் ஆணையம் மற்றும் முரசொலி அறக்கட்டளை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Thank You

Related Posts

அமித் ஷாவின் 50% ஃபார்முலா: தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

எனவே, இந்திரா காந்தி தலைமையிலான அரசு 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. இதன் கீழ், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 2001 வரை மாற்றக் கூடாது என்ற திருத்தத்தை அரசியலமைப்பில்…

கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “24-11-25 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 25.11.25 இலங்கைக்கு தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

  • By admin
  • April 17, 2026
  • 6 views
ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

அமித் ஷாவின் 50% ஃபார்முலா: தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 17, 2026
  • 7 views
அமித் ஷாவின் 50% ஃபார்முலா: தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

  • By admin
  • April 17, 2026
  • 6 views
Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

  • By admin
  • April 17, 2026
  • 6 views
”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 11 views
மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 9 views
கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam
.site-info { display: none; }