அரசு மருத்துவமனை அவலம்: பிணவறையில் வாலிபர் சடலத்தை சாப்பிட்ட நாய், தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்  – Kumudam

தெலுங்கானா மாநிலம், மெகபூபா பாத் மாவட்டம், நாகசாலா பகுதியைச் சேர்ந்த பீமேஸ்வர் (32) என்ற லாரி ஓட்டுநர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். அவர் வீடு திரும்பாத நிலையில், நேற்று காலை அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றில் அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

போலீசாரால் மீட்கப்பட்ட அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக ஜட்சர்லா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பீமேஸ்வரின் உடலை வைப்பதற்கு ஊழியர்கள் முறையான ஸ்ட்ரெச்சர் (Stretcher) கூட வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு வசதிகள் இல்லாத பிணவறையின் தரையிலேயே அவரது உடல் கிடத்தப்பட்டது.

அப்போது பிணவறைக்குள் புகுந்த தெருநாய் ஒன்று, தரையில் இருந்த பீமேஸ்வரின் உடலைக் கடித்துத் தின்னத் தொடங்கியது. இந்தத் துயரமான காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது காட்டுத்தீயாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின்னர் பீமேஸ்வரின் உடல் இரவு முழுவதும் ஆம்புலன்ஸிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்து, பின்னர் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் அதிர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது. உடலைப் பாதுகாப்பதில் இவ்வளவு பெரிய அலட்சியம் காட்டிய மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்களும் அப்பகுதி மக்களும் ஆக்ரோஷமாக வலியுறுத்தி வருகின்றனர்.

Thank You

  • Related Posts

    மத்தியப் பிரதேச ஓய்வூதிய போர்ட்டலைப் புரிந்துகொள்வது – TN செய்திகள்

    அறிமுகம் தி மத்திய பிரதேச ஓய்வூதிய போர்டல் மாநிலத்திற்குள் ஓய்வூதிய மேலாண்மை மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கியமான டிஜிட்டல் தளமாகும். தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியான திறமையான, வெளிப்படையான மற்றும்…

    ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதையடுத்து, ஏப். 7 அன்று இருதரப்புக்கும் இடையே 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் கொண்டு வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Richest Villages In Tamil Nadu: இந்தியாவையே வியக்க வைக்கும் தமிழகத்தின் பணக்கார கிராமங்கள்..!

    • By admin
    • April 27, 2026
    • 11 views
    Richest Villages In Tamil Nadu: இந்தியாவையே வியக்க வைக்கும் தமிழகத்தின் பணக்கார கிராமங்கள்..!

    பாமகவின் 10 வருட போராட்டம்.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அன்புமணி வரவேற்பு! – Kumudam

    • By admin
    • April 27, 2026
    • 11 views
    பாமகவின் 10 வருட போராட்டம்.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அன்புமணி வரவேற்பு! – Kumudam

    குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா? | Can we give potatoes to children every day?

    • By admin
    • April 27, 2026
    • 9 views
    குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா? | Can we give potatoes to children every day?

    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நாங்க இதை செய்ஞ்சிருந்தா அட்லீஸ்ட் போராடியிருக்கலாம்

    • By admin
    • April 27, 2026
    • 4 views
    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நாங்க இதை செய்ஞ்சிருந்தா அட்லீஸ்ட் போராடியிருக்கலாம்

    AR Rahman Hit Songs | Ennai Kaanavillaye Song | Kadhal Desam Tamil Movie | Vineeth | Tabu | Abbas – Ahatamil

    • By admin
    • April 27, 2026
    • 11 views
    AR Rahman Hit Songs | Ennai Kaanavillaye Song | Kadhal Desam Tamil Movie | Vineeth | Tabu | Abbas – Ahatamil

    மத்தியப் பிரதேச ஓய்வூதிய போர்ட்டலைப் புரிந்துகொள்வது – TN செய்திகள்

    • By admin
    • April 27, 2026
    • 15 views
    மத்தியப் பிரதேச ஓய்வூதிய போர்ட்டலைப் புரிந்துகொள்வது – TN செய்திகள்
    .site-info { display: none; }