DMK Vs ADMK | ஒரே மாதிரியான வாக்குறுதிகள் : இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் ஓர் ஒப்பீடு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை வழங்கிய திமுக, எதிர்வரும் தேர்தலுக்கு 525 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதேபோல, அரியணை ஏறும் முனைப்பில் இருக்கும் அதிமுக, 297 வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

இரு பிரதான கட்சிகள் வழங்கிய தேர்தல் அறிக்கைகளில் மகளிர் வாக்காளர்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் கவனம் ஈர்த்துள்ளன.

அதன்படி, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக வாங்க, பழைய பொருட்களை மாற்றிக் கொள்ள 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதேநேரம், அதிமுக ஆட்சி அமைந்தால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃபிரிட்ஜ் இலவசமாக வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் சூழலில், அதை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என திமுகவும், ’குல விளக்கு’ என்ற திட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அதிமுகவும் அறிவித்துள்ளன.

முதியோர் உதவித்தொகையை ஆயிரத்து 200 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என இரு கட்சிகளும் வாக்குறுதி வழங்கியுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி தந்துள்ளார்.

5 ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். அதேபோல, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என திமுகவும், வீடு இல்லாத குடும்பங்களுக்கு ’அம்மா இல்லம்’ திட்டத்தில் விலையில்லா வீடுகள் வழங்கப்படும் எனவும், அதிமுக வாக்குறுதியாக தந்துள்ளது.

மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.

நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாகவும், கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இருகட்சிகளும் வாக்குறுதி அளித்துள்ளன.

மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கான வருமான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாகவும், காப்பீடு தொகை 10 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் போன்ற பெரிய சிகிச்சைகளுக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி தந்துள்ளார்.

ஏற்க முடியாத சில ஷரத்துகளை குறிப்பிட்டு தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறப்படும் என அதிமுகவும் வாக்குறுதி வழங்கியுள்ளன.

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.



Thank You

Related Posts

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – மதுகேசவ் பொற்கண்ணன் எவரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும். ஒருவர் பெற்றத் திறமை மற்றவரிடம் இல்லை என்பதற்காக அவரைக் குறைவாக எண்ணக்கூடாது. அவரவர்க்கு…

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – மதுகேசவ்  பொற்கண்ணன் “உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந் தேர்க்கு/ அச்சாணி அன்னார் உடைத்து” (குறள் 667) என்று நமக்கு வாழ்க்கைப் பாதையை உணர்த்துகின்றார் வள்ளுவர். பெரும்பாலானப்  பழையத் திரைப்படங்களில், நகைச்சுவைக் காட்சி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 6 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

  • By admin
  • April 19, 2026
  • 8 views
ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

Latest Cisco 350-401 ENCOR Exam Questions and Answers – Study Online Today – TN News

  • By admin
  • April 19, 2026
  • 9 views

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam
.site-info { display: none; }