திரவுபதி 2 படத்துக்கு இடைக்கால  தடைகோரி வழக்கு: நீதிமன்றம் மறுப்பு – Kumudam

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு 14ம் நூற்றாண்டில்  ஆட்சி புரிந்த மன்னன் வீர வல்லாள தேவன். இவரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் திரௌபதி- 2 படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. வீர வல்லாள தேவன் என்பவர் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்கு பல கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவனங்கள் உள்ளன. திரெளபதி -2 படத்தில் வீர வல்லாள தேவனை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவராக இயக்குநர் மோகன் சித்தரித்துள்ளார். திரைப்படத்தின் சுவரொட்டிகளில் வீர வல்லாள தேவன் என்பதை வீர வல்லாளன் என்று  மட்டும் குறிப்பிட்டுள்ளனர்.

இது உள்நோக்கம் கொண்டது. இது கள்ளர் சமூகத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும். இதை கண்டித்து மேலூரில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் படத்துக்கு அவசரம் அவசரமாக யூ/ஏ சான்றிதழை தனிக்கை வாரியம் வழங்கியுள்ளது. யூ/ஏ சான்றிதழை திரும்ப பெறுமாறு தனிக்கை வாரியத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திரௌபதி- 2 படத்தை தனிக்கை வாரியம் மறு ஆய்வு செய்யவும், படத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று பிழைகளை திருத்தம் செய்யும் வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டு என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திரவுபதி 2 படத்துக்கு  டிச. 31ல் தனிக்கை குழு யூ/ஏ சான்று வழங்கியுள்ளது என்றார். பின்னர் நீதிபதி, தனிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளதால் நீதிமன்றம் தலையிட முடியாது. பொதுநல வழக்கு தொடர உரிமை வழங்கப்படுகிறது என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Thank You

Related Posts

பாமகவின் 10 வருட போராட்டம்.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அன்புமணி வரவேற்பு! – Kumudam

பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.  ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்று பாமகவின் அன்புமணி தனது எக்ஸ் சமூக…

விஜய்யின் பேச்சில் முதிர்ச்சியில்லை.. கூட்டணியை நம்பி திமுக உள்ளதா? ஜவாஹிருல்லா கருத்து – Kumudam

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு- ”நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பிரதமருக்கும், முதலமைச்சருக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் எதிராகக் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பு,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

  • By admin
  • April 27, 2026
  • 4 views
LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? – ‘இந்த’ கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

  • By admin
  • April 27, 2026
  • 4 views
உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? – ‘இந்த’ கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

Theatre and OTT Releases : சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் கர… இந்த வார தியேட்டர் & OTT வெளியீடுகள் ஃபுல் லிஸ்ட் இதோ | Kara To The Kerala Story 2 This Week Theatre And Ott Release Movies

  • By admin
  • April 27, 2026
  • 5 views
Theatre and OTT Releases : சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் கர… இந்த வார தியேட்டர் & OTT வெளியீடுகள் ஃபுல் லிஸ்ட் இதோ | Kara To The Kerala Story 2 This Week Theatre And Ott Release Movies

ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டு கிளவுட்ஸ் கேரளா பிரீமியர் லீக் மோதல்

  • By admin
  • April 27, 2026
  • 4 views
ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டு கிளவுட்ஸ் கேரளா பிரீமியர் லீக் மோதல்

Richest Villages In Tamil Nadu: இந்தியாவையே வியக்க வைக்கும் தமிழகத்தின் பணக்கார கிராமங்கள்..!

  • By admin
  • April 27, 2026
  • 11 views
Richest Villages In Tamil Nadu: இந்தியாவையே வியக்க வைக்கும் தமிழகத்தின் பணக்கார கிராமங்கள்..!

பாமகவின் 10 வருட போராட்டம்.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அன்புமணி வரவேற்பு! – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 11 views
பாமகவின் 10 வருட போராட்டம்.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அன்புமணி வரவேற்பு! – Kumudam
.site-info { display: none; }