உஷாரா இருங்க : இனி பொது இடங்களில் கட்டிய கழிவுகளை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வாகனம் பறிமுதல் – Kumudam

இதுகுறித்து சென்னை மண்டல உதவி ஆணை​யர்​களுக்கு மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னையின் முக்​கிய சாலைகள், தெருக்​கள், நடை​பாதைகள், நீர்​நிலைகள், திறந்​த வெளி​கள் மற்​றும் காலி இடங்​களில் கட்​டு​மானக் கழி​வு​களை கொட்​டும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​வது மாநக​ராட்சி கவனத்​துக்கு வந்​துள்​ளது.

இத்​தகைய செயல்​களால் போக்​கு​வரத்​துக்கு இடையூறு ஏற்​படு​வதுடன் காற்று மாசு​பாடு, வெள்ள அபா​யம் மற்​றும் விபத்​துகள் போன்ற பொதுச் சுகா​தார பாதிப்​பு​கள் ஏற்​படு​கின்​றன.

இதை தடுக்​கும் வகை​யில் ‘சுத்​த​மான மற்​றும் பாது​காப்​பான கட்​டு​மானத்​துக்​கான வழி​காட்​டு​தல்​கள் – 2025’ மற்​றும் ‘கட்​டு​மானம் மற்​றும் இடி​பாட்டு கழி​வு​கள் மேலாண்​மைக்​கான வழி​காட்​டு​தல்​கள் – 2025’ ஆகிய​வற்​றின்படி புதிய வழி​காட்டு நெறி​முறை​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

அதன்​படி, பொது இடங்​களில் அங்​கீ​காரமின்றி கட்​டு​மானக் கழி​வு​களை கொட்​டும் வாக​னங்​களை அமலாக்​கக் குழு​வினர் கண்​டறிந்​தால், அந்த வாக​னங்​கள் உடனடி​யாக பறி​முதல் செய்​யப்​படும்.

குற்​றச் செயலில் ஈடு​பட்ட வாக​னத்​தின் படங்​கள் மற்​றும் கொட்​டப்​பட்ட கழி​வு​களின் விவரங்​கள் ஆதா​ரங்​களு​டன் செல்​போன் செயலி​யில் பதிவேற்​றப்​பட்​டு, கொட்​டப்​படும் கழி​வு​களின் அளவு அடிப்​படை​யில் ஒரு டன்​னுக்கு ரூ.5,000 வீதம் அபராதம் விதிக்​கப்​படும்.

விதிக்​கப்​பட்ட முழு அபராதத்​தை​யும் செலுத்​திய பின்​னரே பறி​முதல் செய்​யப்​பட்ட வாக​னங்​கள் விடுவிக்​கப்​படும். சென்னை மாநக​ராட்​சி​யின் 15 மண்​டலங்​களி​லும் இந்த உத்​தரவு உடனடி​யாக நடை​முறைக்கு வரு​கிறது.

எனவே, கட்​டு​மான நிறு​வனங்​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள் மற்​றும் பொது​மக்​கள் தங்​களின் கட்​டிடக் கழி​வு​களை மாநக​ராட்​சி​யால் நிர்​ண​யிக்​கப்​பட்ட அங்​கீகரிக்​கப்​பட்ட மறுசுழற்சி அல்​லது சேகரிப்பு மையங்​களில் மட்​டுமே ஒப்​படைக்க வேண்​டும்.

விதி​மீறலில் ஈடு​படு​வோர் மீது எவ்​வித வி​தி​விலக்​கும் இன்றி கடுமை​யான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Thank You

Related Posts

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 10:09 PM IST திருச்சி விமான நிலையம் அருகே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர முயன்றகூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர் செய்தி18 திருச்சி கிழக்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

  • By admin
  • April 20, 2026
  • 10 views
Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 11 views
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 10 views
மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 11 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 7 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views
.site-info { display: none; }