கருத்துக்கணிப்பு வெளியிட தடை, சர்வே எடுத்தால் 2 ஆண்டு ஜெயில்: தேர்தல் ஆணையம் அதிரடி  – Kumudam

கருத்துக்கணிப்புகள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

மேற்காணும் பொதுத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியீடுதலுக்கும் பரப்புதலுக்கும் பின்வரும் வரையறைகள் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:

அ) 1951ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126Aஆம் பிரிவின் விதித்துறைகளின்படி, (1) யாதொரு நபரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தினால் இதுசம்பந்தமாக.

(2) உட்பிரிவு (1)-றின் காரணங்களுக்காக, தேர்தல் ஆணையம், ஒரு பொது ஆணைப்படி, பின்வருவனவற்றைக் கருத்தில் கொண்டு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும், அதாவது:- (a) ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.

(b) ஓர் இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளிலிருந்து வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.

பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம். (3) இப்பிரிவின் விதிமுறைகளை மீறும், யாதொரு நபரும் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

ஆ) 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126A ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன பிரிவின், (2)ஆம் உட்பிரிவின் விதித்துறைகளின்கீழ் மேற்காணும் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம், 09.04.2026 (வியாழக்கிழமை) காலை 7.00 மணியிலிருந்து 29.04.2026 (புதன்கிழமை) மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) ஆகியவை தடை செய்யப்பட வேண்டிய கால அளவாக இதனால் அறிவிக்கிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Thank You

Related Posts

சட்டமன்ற தேர்தல் ஹோட்டல், டீக்கடைகள் மூடல் உணவு கிடைக்காமல் பேச்சுலர்கள் தவிப்பு  – Kumudam

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 37.56 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குபதிவு நடைபெறும் இன்றைய…

அதிகரித்த வாக்குப் பதிவு சதவிகிதம்! ”மே 4 தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 23, 2026 9:26 PM IST “தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செய்தி18 தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக 84.69% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “மே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

சட்டமன்ற தேர்தல் ஹோட்டல், டீக்கடைகள் மூடல் உணவு கிடைக்காமல் பேச்சுலர்கள் தவிப்பு  – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 13 views
சட்டமன்ற தேர்தல் ஹோட்டல், டீக்கடைகள் மூடல் உணவு கிடைக்காமல் பேச்சுலர்கள் தவிப்பு  – Kumudam

Naakku Chevandhavarae | Naatpadu Theral – 01 | Vairamuthu | Vagu Mazan | Kiruthiga Udhayanidhi – Ahatamil

  • By admin
  • April 24, 2026
  • 7 views
Naakku Chevandhavarae | Naatpadu Theral – 01 | Vairamuthu | Vagu Mazan | Kiruthiga Udhayanidhi – Ahatamil

UPSC CSEயில் தேர்ச்சி பெறுதல்: உங்கள் முழுமையான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 24, 2026
  • 8 views
UPSC CSEயில் தேர்ச்சி பெறுதல்: உங்கள் முழுமையான வழிகாட்டி – TN செய்திகள்

அதிகரித்த வாக்குப் பதிவு சதவிகிதம்! ”மே 4 தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 23, 2026
  • 7 views
அதிகரித்த வாக்குப் பதிவு சதவிகிதம்! ”மே 4 தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

  • By admin
  • April 23, 2026
  • 8 views
ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 12 views
சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – Kumudam
.site-info { display: none; }