தாய்லாந்தில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. பயணிகள் நிலை என்ன? பரபரப்பு வீடியோ! | Air India Express Hard Landing In Phuket Passengers Safe Runway Shut Viral Video



இந்த சம்பவம் காரணமாக புகெட் ஓடுதளம் மூடப்பட்டதால் அங்கு வர வேண்டிய மற்ற விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தாய்லாந்தின் புகெட் (Phuket) சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று விபத்தில் சிக்கியுள்ளது. அதாவது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, புகெட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது ‘ஹார்ட் லேண்டிங்’ (Hard Landing) எனப்படும் அதிரடியான முறையில் தரையைத் தொட்டது. இதனால் விமானத்தின் அடிப்பகுதி மற்றும் சக்கரங்களுக்குச் சேதம் ஏற்பட்டது.

ஓடுதளம் தற்காலிகமாக மூடல்

அந்த விமானம் கடினமாக தரையிறங்கியதால் விமானத்தில் இயந்திரக் கோளாறு அல்லது கட்டமைப்புச் சேதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சேதமடைந்த விமானத்தை ஓடுதளத்திலிருந்து அகற்றும் பணிகளுக்காக, புகெட் விமான நிலையத்தின் ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தின்போது விமானத்தில் 131 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

ட்வீட்டை ஏற்ற உருட்டவும்…

ஹார்ட் லேண்டிங் என்றால் என்ன?

இந்த சம்பவம் காரணமாக புகெட் ஓடுதளம் மூடப்பட்டதால் அங்கு வர வேண்டிய மற்ற விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இப்போது உங்களுக்கு ஹார்ட் லேண்டிங் என்றால் என்ன? என்ற கேள்வி எழுந்திருக்கும். ஒரு விமானம் சாதாரண நிலையில் மென்மையாகத் தரையிறங்க வேண்டும். ஆனால், மோசமான வானிலை, காற்றின் வேகம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் வழக்கத்தை விட அதிக வேகத்துடனும் விசையுடனும் தரையில் மோதித் தரையிறங்குவதை ‘ஹார்ட் லேண்டிங்’ என்று கூறுவார்கள்.

அடிக்கடி சர்ச்சையில் ஏர் இந்தியா விமானம்

கடந்த ஆண்டு குஜராத்தின் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து இந்தியா மட்டுமின்றி உலகையே உலுக்கியது. அதன்பின்பு ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.



Thank You

Related Posts

குஜராத் அணிக்கெதிரான போட்டியிலும் ரோஹித் இல்லை.. அவருக்கு பதிலாக அறிமுகமான

– விளம்பரம் – மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஆர்.சி.பி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது காயமடைந்தார். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற…

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

Rahu Ketu Peyarchi 2026 Predictions for all 12 Zodiac Signs: 2026-ம் ஆண்டு நிகழப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் பலன்கள், ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். ஜோதிடத்தில் நிழல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

“தம்பி, நீ சினிமாவுக்கு கிடைச்ச சொத்து!" – ‘யூத்’ கென் கருணாஸை பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

  • By admin
  • April 21, 2026
  • 8 views
“தம்பி, நீ சினிமாவுக்கு கிடைச்ச சொத்து!" – ‘யூத்’ கென் கருணாஸை பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

Free AWS SAA-C03 Practice Questions – Latest Exam Material to Pass Fast – TN News

  • By admin
  • April 21, 2026
  • 9 views
Free AWS SAA-C03 Practice Questions – Latest Exam Material to Pass Fast – TN News

குஜராத் அணிக்கெதிரான போட்டியிலும் ரோஹித் இல்லை.. அவருக்கு பதிலாக அறிமுகமான

  • By admin
  • April 21, 2026
  • 3 views
குஜராத் அணிக்கெதிரான போட்டியிலும் ரோஹித் இல்லை.. அவருக்கு பதிலாக அறிமுகமான

75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டம்; எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 21, 2026
  • 6 views
75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டம்; எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மலையாள நடிகர் திலீப் விடுதலை : போலீசில் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 6 views
மலையாள நடிகர் திலீப் விடுதலை : போலீசில் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை  – Kumudam

Latest CCSP Exam Questions and Answers – Study Online and Pass with Confidence – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views
.site-info { display: none; }