Samantha:“இந்த உறவின் காரணமாகவே” – விவாகரத்துக்குப் பின் மனம் திறந்த சமந்தா! | Samantha: “Because of this relationship” – Samantha opens up after divorce!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகியான சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு “தி ஃபேமிலி மேன் 2′ படப்பிடிப்பின்போது தொடங்கிய இவர்களது நட்பு, பல ஆண்டுகளாக வளர்ந்து திருமணத்தில் முடிந்தது.

இந்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புதிய உறவு குறித்து முதன்முறையாக நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் விவாகரத்து என்ற சூழலை அடைந்தபோது, என்னை நானே முழுமையாக மறைத்துக்கொண்டேன். மீண்டும் ஒருவரை நம்புவதோ அல்லது நெருங்கிப் பழகுவதோ இனி சாத்தியமே இல்லை என்றுதான் நினைத்தேன்.

இந்த நிலையில்தான், பிரபல இயக்குநரான ராஜ் நிதிமோருவைச் சந்தித்தேன். அவர் என் வாழ்க்கையில் இருப்பதால், நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன்.

அந்த அன்பையும் நட்பையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என் மனநிலை மாறியதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்போது நான் இருக்கும் இந்த உறவின் காரணமாகவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னில் ஏற்பட்ட இந்த நேர்மறையான மாற்றத்தை எனது நெருங்கிய தோழிகளும் கவனித்து ஒப்புக்கொண்டார்கள்” என்றார்.

தற்போது சமந்தா நடித்து வரும் ‘மா இன்டி பங்காரம்’ (Ma Inti Bangaram) திரைப்படத்திற்கு ராஜ் நிதிமோரு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார். நந்தினி ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thank You

Related Posts

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Music – Santhosh Narayanan DOP – Shreyaas Krishna Art Directors – T. Santanam, Vinoth Rajkumar (UK) Editor –…

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

அஜித்தின் பந்தயப் பயணம் அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் ரேஸிங்கில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த குழுவை உருவாக்கியுள்ளார். இந்தக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 6 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

  • By admin
  • April 19, 2026
  • 8 views
ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

Latest Cisco 350-401 ENCOR Exam Questions and Answers – Study Online Today – TN News

  • By admin
  • April 19, 2026
  • 9 views

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam
.site-info { display: none; }