தொடர் விடுமுறை அறிவிப்பு… குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள் அரசு ஊழியர்கள்!

School Holiday: நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை.

தமிழகத்தில் விடுமுறை என்ற வார்த்தையை கேட்டாலே பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் குஷிதான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டாலே சொல்ல வேண்டாம். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 6-ம் தேதி திங்கட்கிழமை மாலை நடைபெற உள்ளது.

இந்த தேரோட்டதை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பள்ளிகளில் ஏற்கனவே தேர்வுகள் இருந்தால், அவை திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் அரசு பொதுத்தேர்வுகள் மாற்றமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 6ம் தேதி திங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முந்தை நாட்கள் சனி, ஞாயிறு வார விடுமுறை வருவதால் இம்மாவட்டத்திற்கு மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Thank You

Related Posts

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

April 20 Indraya Rasi Palan : இன்றைய ராசி பலன்கள் 20.04.2026 (திங்கள்கிழமை) – மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தினசரி பலன்களை இங்கே விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இன்று நண்பர்களிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள்…

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நியூ சண்டிகர் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 8 views
மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 10 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 7 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }