சேவாக் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது இந்திய வீரராக சமீர் ரிஸ்வி





சமீர் ரிஸ்வி


– விளம்பரம் –

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டியானது நேற்று அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வைத்து அசத்தியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

3 ஆவது இந்திய வீரராக சமீர் ரிஸ்வி நிகழ்த்திய சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 164 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

– விளம்பரம் –

இந்த போட்டியின் போது டெல்லி அணி சார்பாக சமீர் ரிஸ்வி 90 ரன்கள் குவித்து அந்த அணி வெற்றிபெற மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். இதன் மூலம் அவருக்கு நேற்றைய போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் பெற்ற இந்த ஆட்டநாயகன் விருதின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோருக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஏற்கனவே இந்த 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்த அவர் நேற்றைய இரண்டாவது போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். அதுமட்டும் இன்றி கடைசியாக கடந்த ஆண்டு அவர் விளையாடிய கடைசி போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : 21 அல்லது 25 வயதில் வைபவ் சூர்யவன்ஷி நிச்சயம் இதை செய்வார்.. அவர் நல்ல டேலன்ட் – ஜாஸ் பட்லர் புகழாரம்

இப்படி தொடர்ச்சியாக மூன்று ஐ.பி.எல் போட்டிகளில் ஆட்டநாயகன் விருதினை வென்ற மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டநாயகன் விருதுகளை வென்ற எட்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

Rahu Ketu Peyarchi 2026 Predictions for all 12 Zodiac Signs: 2026-ம் ஆண்டு நிகழப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் பலன்கள், ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். ஜோதிடத்தில் நிழல்…

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

பழங்கால வரலாறு, கண்ணை கவரும் தீவுகள், உயிரோட்டமான கலாச்சாரம்னு எல்லாம் கலந்த ஒரு கலவைதான் கிரீஸ். ஏதென்ஸின் வரலாற்று சின்னங்கள்ல இருந்து சான்டோரினியின் சன்செட், மைக்கோனோஸின் நைட் லைஃப் வரைக்கும் மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கும். வரலாறு, புராணம், பிரமிக்க வைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டம்; எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 21, 2026
  • 5 views
75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டம்; எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மலையாள நடிகர் திலீப் விடுதலை : போலீசில் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 5 views
மலையாள நடிகர் திலீப் விடுதலை : போலீசில் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை  – Kumudam

Latest CCSP Exam Questions and Answers – Study Online and Pass with Confidence – TN News

  • By admin
  • April 20, 2026
  • 5 views

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

  • By admin
  • April 20, 2026
  • 4 views
மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 7 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

Latest CEH Exam Questions and Answers – Study Online for Certified Ethical Hacker – TN News

  • By admin
  • April 20, 2026
  • 8 views
.site-info { display: none; }