– விளம்பரம் –
ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது தற்போது நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடிய மூன்று ஆட்டங்களில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று எட்டாவது இடத்தினை பிடித்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு வலிமையான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியானது மீண்டும் சிறப்பான கம்பேக் கொடுத்து பிளே ஆப் வாய்ப்பை எட்டும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா நிகழ்த்திய சாதனை :
மும்பை அணி தங்களது நான்காவது ஆட்டத்தில் ஏப்ரல் 12-ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள காத்திருக்கிறது. இந்நிலையில் அந்த போட்டியில் விளையாட விளையாடுவதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
– விளம்பரம் –
அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக அறிமுகமான அவர் 2010 வரை அந்த அணிக்காகவே விளையாடியிருந்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த அவர் 2011 ஏப்ரல் 10-ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது முதல் ஆட்டத்தில் விளையாடியிருந்தார்.
தற்போது 2026 ஏப்ரல் 10-ஆம் தேதியான் இன்றோடு அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் 15 ஆண்டுகள் விளையாடி தனித்துவமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 230-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் அவர் திகழ்கிறார். அதோடு மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிக சதங்களை அடித்த வீரராகவும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : 17 வருஷமா ஒரே டெம்பிளேட்.. சி.எஸ்.கே அணியின் வீழ்ச்சிக்கு இவர்தான் காரணம் – லட்சுமிபதி பாலாஜி குற்றச்சாட்டு
அதுமட்டுமின்றி கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணியை உச்சிக்கு கொண்டு சென்ற அவரது தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இல்லாவிட்டாலும் துவக்க வீரராக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்