– விளம்பரம் –
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த மோதல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த வேளையில் நேற்று இந்த போட்டியானது மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
பிரியான்ஷ் ஆர்யா நிகழ்த்திய அசத்தல் சாதனை :
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவிக்க பின்னர் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணியானது 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் கிட்டத்தட்ட 420 ரன்கள் வரை பேட்ஸ்மேன்களால் அடிக்கப்பட்டதால் போட்டி முழுவதுமே மிக சுவாரஸ்யமாக அமைந்தது என்று கூறலாம்.
– விளம்பரம் –
சி.எஸ்.கே அணி சார்பாக இந்த போட்டியில் ஆயுஷ் மாத்ரே 73 ரன்களையும், சிவம் துபே 45 ரன்களையும் குவித்தனர். அதேபோன்று பஞ்சாப் அணி சார்பாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 43 ரன்களையும் குவித்து அசத்தினர். இப்படி இரு அணிகளிலுமே பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் இந்த போட்டியில் 11 பந்துகளை மட்டுமே சந்தித்த பஞ்சாப் அணியின் துவக்க வீரரான பிரியான்ஷ் ஆர்யாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படி 11 பந்துகளை மட்டுமே சந்தித்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது ஏனெனில் : அவர் இந்த 11 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 354 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 39 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தை பஞ்சாப் அணிக்கு வழங்கியதாலே அந்த அணி வெற்றிகரமாக இலக்கை நோக்கி சென்றது. இதனாலே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது வீரராக அவர் மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : யுஸ்வேந்திர சஹாலுக்கு 4 ஆவது ஓவரை வீச வழங்காதது ஏன்? இதுதான் காரணம் – ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதற்கு முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு கிளென் பிலிப்ஸ் 7 பந்துகளில் 25 ரன்கள் குவித்த போது ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார். அதற்கடுத்து தற்போது குறைந்த பந்துகளில் விளையாடி ஆட்டநாயகன் விருதினை வென்ற இரண்டாவது வீரராக பிரியான்ஷ் ஆர்யா இந்த போட்டியின் மூலம் தனது சாதனையை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்