கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகை தர உள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
மதுரைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரும்போது எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமரின் பயணத் திட்டம் மற்றும் நிகழ்ச்சித் திட்டம் என்ன?
வரும் மார்ச் 1ஆம் தேதி மதுரை வருகை தரும் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை திறந்துவைக்க இருப்பதாகவும், ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலை துறை சார்ந்த முடிவுற்ற பணிகளையும் திறந்துவைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், திருப்பரங்குன்றம் கோயிலில் வழிபாடு நடத்தும் பிரதமர், மண்டேலா நகர் பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
முன்னதாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமானங்களை பிரதமர் மோடி திறந்துவைக்க இருப்பதாகத் தகவல் பரவியது. ஆனால், பிரதமரின் அதிகாரப்பூர்வ பயணத் திட்டத்தில் எய்ம்ஸ் திறப்பு குறித்த தகவல்கள் இல்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பேசுபொருளான நிலையில், வரும் தேர்தலிலும் எய்ம்ஸ் விவகாரம் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.
பிப்ரவரி 26, 2026 10:16 PM IST