யூத் விமர்சனம்: கென் கருணாஸ் நடிப்பில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் வெளியான யூத் படம் எப்படி இருக்கு? | Youth Review: How is Youth movie starring Ken Karunas and featuring music by G.V. Prakash Kumar?

பதின்வயது இளைஞனுக்குரிய உடல்மொழி, சேட்டை, நடனம், ‘3’ காதல் ஆட்டங்கள், அவருக்குள் ஏற்படும் குற்றவுணர்வு மற்றும் மனமாற்றம் என அனைத்தையும் கச்சிதமாக நடிப்பில் புகுத்தி ‘யூத்’ நாயகனாகத் தடம் பதிக்கிறார் கென் கருணாஸ். படிப்போடு நடிப்பும் சூப்பர் செதம்பரம்!

பள்ளி மாணவிகளாக மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நல்லதொரு பங்களிப்பை நல்கி, விரலில் ஹார்ட்டின் காண்பிக்க வைத்திருக்கிறார்கள்!

மூன்றாவது கதாநாயகியாக வரும் ப்ரியான்ஷி யாதவிற்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை. மகனுக்கும், மகனின் கல்விக்கும் எந்தக் குறையும், தடையும் வந்துவிடக் கூடாது என அரும்பாடுபடும் அப்பாவித் தாயாக தேவதர்ஷினி, நடிப்பின் மூலம் நம் மனதைக் கனமாக்குகிறார்.

மழித்த தாடி மற்றும் பருமனான மீசையுடன் ஸ்ட்ரிக்ட் தந்தையாக வருகிறார் சுராஜ் வெஞ்சராமூடு. வழக்கமான அம்சங்கள் நிறைந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அவருடைய ஸ்டைல் கொண்டு இனிப்பு, காரம் என அதன் சுவையை ஏற்றியிருக்கிறார்.

சின்ன தமிழா, ஈஸ்வர் உள்ளிட்ட கென் & கேங், மீனாட்சி தினேஷின் தோழிகளாக வருபவர்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மணிகண்டன் & குழு ஆகியோர் படத்தின் சிரிப்பொலி எபிசோடுகளை ஷார்ப்னர் கொண்டு சீவியிருக்கிறார்கள்.

இளைஞர்கள் விமர்சனம் | யூத் விமர்சனம்

Youth Rewiew | யூத் விமர்சனம்

சிறிய வீடு, கென்னின் அறை, பரபரப்பாக இருக்கும் பள்ளி வளாகம், ஜாலியான வகுப்பறை போன்றவற்றை கலர்ஃபுல் ரங்கோலியாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி. முதல் பாதி காமெடிக்கு, இரண்டாம் பாதி எமோஷனுக்கு எனக் கணக்குப் போட்டு காட்சிகளை அடுக்கி செண்டம் வாங்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் நாஷ்.

2014-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட பட்டன் மொபைல்கள், டி.வி, பழைய ரூபாய் நோட்டுகள், பழைய கோலா பாட்டில், நெட் சென்டர்கள் என அக்காலக்கட்டத்தை நினைவூட்டி, கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறது கலை இயக்குநர் ராமு தங்கராஜின் கச்சிதமான கைவண்ணம்.

Thank You

Related Posts

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. நட்பு பாடல் – மதன் கார்க்கி இன்றைய பகுதிக்கு, ‘ஆர்.ஆர்.ஆர்’…

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 1:34 PM IST விளம்பரங்கள், தயாரிப்பு உறைகள் மற்றும் இணையதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார். செய்தி18 பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

  • By admin
  • April 20, 2026
  • 9 views
Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 10 views
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 9 views
மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 11 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 7 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views
.site-info { display: none; }