சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்யும் திருமாவளவன்? – என்ன காரணம்? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் கட்சியினுடைய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

செய்தி18
செய்தி18

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நேரடியாக போட்டியிடப்போவதாக திருமாவளவன் அறிவித்த நிலையில் புதிய திருப்பமாக வேறு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக 8 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய நிலையில், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் கட்சியினுடைய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

“தமிழக மாநில அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தச் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் சூழல், வெகுவாக மாற இருக்கிறது. இந்த நிலையில், காட்டுமன்னார்கோயிலில் நான் போட்டியிடுகிறேன்” எனவும் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்த நிலையில், 6ஆம் தேதி அன்று வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தார். இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அதற்கு பதிலாக வேறு ஒருவரை நிற்க வைப்பதாகவும் தற்போது திருமாவளவன் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் பரப்புரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை திருமாவளவனிடம் வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை ஏற்று தேர்தலில் போட்டியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாகவும் இதுகுறித்து திருமாவளவன் பேசவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநில அரசுக்கு திருமாவளவன் வருவது குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் இந்த முடிவை திருமாவளவன் எடுத்திருப்பது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Thank You

Related Posts

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 10:09 PM IST திருச்சி விமான நிலையம் அருகே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர முயன்றகூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர் செய்தி18 திருச்சி கிழக்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய்,…

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – மதுகேசவ் பொற்கண்ணன் எவரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும். ஒருவர் பெற்றத் திறமை மற்றவரிடம் இல்லை என்பதற்காக அவரைக் குறைவாக எண்ணக்கூடாது. அவரவர்க்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 9 views
மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 10 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 7 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }