– விளம்பரம் –
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்தது.
அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் :
அதன்காரணமாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்தது. ஆனால் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அந்தவகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியானது மார்ச் 5-ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியை கொண்டு வருகின்றனர்.
– விளம்பரம் –
இந்நிலையில் இந்த அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. ஆனால் கடைசி இரண்டு போட்டிகளாக இந்திய அணி எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து பெற்று வருவதால் இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காமல் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போதைய இந்திய டி20 பலமான அணியாக பார்க்கப்படுவதால் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர். அதன் காரணமாக இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் நிகழாது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
– விளம்பரம் –
இதையும் படிங்க : பேட் கம்மின்ஸ் பாணியில் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்த சாம் கரன் – விவரம் இதோ
1) சஞ்சு சாம்சன், 2) அபிஷேக் சர்மா, 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) திலக் வர்மா, 7) ஷிவம் துபே, 8) அக்சர் படேல், 9) அர்ஷ்தீப் சிங், 10) வருண் சக்கரவர்த்தி, 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.
விளம்பரம்