DMK DMDK Alliance How Premalatha Vijayakanth Joins With Mk Stalin For The First Time In 2026 Tamil Nadu Assembly Election| முடிஞ்சது சஸ்பென்ஸ்! தட்டி தூக்கிய எ.வ. வேலு.. திமுக கூட்டணியில் தேமுதிக வந்தது எப்படி?


திமுக தேமுதிக கூட்டணியின் சமீபத்திய செய்திகள்: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகம் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என நாக்கு முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தேமுதிக வரும் தேர்தலில் எந்த கூட்டணியில் இணையும் என கேள்வி எழுப்பப்பட்டே இருந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

Zee செய்திகளை விருப்பமான ஆதாரமாகச் சேர்க்கவும்

திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக

அதாவது, தேமுதிக இன்று (பிப்ரவரி 19) அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில்  முதல்வர் ஸ்டாலினை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்துள்ளார். அப்போது, அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி எம்.பி ஆகியோர் உடன் இருந்தனர். தேமுதிக திமுக கூட்டணியில் இருந்து பெரும் ட்விஸ்டை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக கூட்டணியில் தான் இணையும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென திமுக பக்கம் பிரேமலதா சாய்ந்துள்ளார். இது பெரிதும் முக்கியத்தும் பெறுகிறது.

திமுகவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம். விஜயகாந்த் இருந்தவரை, திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. 2011ஆம்  ஆண்டு எதிர்க்கட்சியாக உயர்ந்த தேமுதிக, அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்விகளை மட்டுமே சந்தித்தது. 2016ம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் களம் கண்டு தோல்வியை கண்டது.  2021ஆம் ஆண்டு அமமுக, எஸ்டிபிஐ கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. ஆனால், அந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. ஆனால், வெற்றி என்பது தேமுதிகவுக்கு குறைவு தான்.  இந்த நிலையில், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என கேள்வி எழுந்தது.

பின்னணி என்ன?

திமுக, அதிமுக என இரண்டு தரப்பிடமும் தேமுதிக பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது. ஆனால், நாங்கள் யாரிமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பிரேமலதா கூறி வந்தார். அதிமுக கூட்டணியில் இருந்த கடந்த லோக்சபா தேர்தலில் இருந்த அதிமுகவுக்கு, ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க உறுதி அளிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால், தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை. இதனால், தேமுதிக அதிருப்தியில் இருந்தது.   இதனால், இந்த தேர்தலில் திமுக, அதிமுக என இருகட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தியது.   குறிப்பாக, திமுகவின் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் பேச்சுவார்த்தையில் தேமுதிகவிடம் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கு மத்தியில் கோவையில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், எ.வ.வேலுவின் தொடர் முயற்சியின் காரணமாக, திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதே நேரத்தில், ராஜ்யசபா சீட்டிற்கும் திமுக ஒப்புக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்திருக்கலாம். எனவே, வரும் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ரூ.5000 வரவில்லையா? பெண்கள் 3 விஷயங்களை சரிபார்க்கவும்

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் : மாவட்ட ஆட்சியர்களிடம் குவியும் மனுக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு: https://bit.ly/3AIMb22

ஆப்பிள் இணைப்பு: https://apple.co/3yEataJ





Thank You

Related Posts

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 10:09 PM IST திருச்சி விமான நிலையம் அருகே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர முயன்றகூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர் செய்தி18 திருச்சி கிழக்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய்,…

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – மதுகேசவ் பொற்கண்ணன் எவரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும். ஒருவர் பெற்றத் திறமை மற்றவரிடம் இல்லை என்பதற்காக அவரைக் குறைவாக எண்ணக்கூடாது. அவரவர்க்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 9 views
மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 10 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 7 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }