தம்பி உனக்கு 25 வயசு ஆகுது.. இன்னும் 20ன்னு நெனச்சிட்டு இருக்காத.. அபிஷேக் சர்மாவுக்கு – ஏ.பி.டி அட்வைஸ்

இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு அரை சதங்களை மட்டுமே பதிவு செய்திருந்தார். இந்த டி20 உலக கோப்பை தொடர் முழுவதுமே அவருக்கு ஒரு ஏற்றத்தாழ்வு அமைந்த தொடராக முடிந்தது. இருப்பினும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 21 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார்.

அபிஷேக் சர்மாவுக்கு ஏ.பி.டி கொடுத்த அட்வைஸ் :

அதனை தொடர்ந்து தற்போது 2026 ஐபிஎல் போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணிக்காக அவர் விளையாட இருக்கும் வேளையில் முன்பை விட தற்போது கூடுதல் பொறுப்பை எடுத்துக் கொண்டு அவர் அணியின் தேவையை உணர்ந்து விளையாட வேண்டும் என அபிஷேக் ஷர்மாவிற்கு முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் சர்மா தற்போது தனது கரியரில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளார். ஏனெனில் தற்போது அவருக்கு 25 வயதாகிறது. இனி 20 வயது இளம்வீரர் போல அவரால் விளையாட முடியாது. இந்த வயதில் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அணிக்காக விளையாட வேண்டிய அவசியம் ஏற்படும்.

தற்போதைய நிலையில் அபிஷேக் சர்மா சர்வதேச போட்டியிலும் அனுபவம் பெற்று விட்டார். இனிமேல் அவர் ஊடக அழுத்தம் எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக இருக்கும் அவரிடம் இருந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அதை மனதளவில் சமாளிப்பதே பெரிய வெற்றி.

இதையும் படிங்க : முன்பு இருந்த அவரது மேஜிக் இப்போ இல்ல.. வருண் சக்கரவர்த்தி குறித்து பேசிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

அதேநேரத்தில் இனிவரும் போட்டிகளில் சூழலை புரிந்து கொண்டு அவர் விளையாட வேண்டும். எப்போதுமே அதிரடியாக விளையாடாமல் அணிக்கு என்ன தேவையோ? அந்த ரோலை ஏற்று அவர் விளையாட வேண்டும் என்றும் சில ஆலோசனைகளை அபிஷேக் சர்மாவுக்கு ஏ.பி.டி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதவி தம்பி உனக்கு 25 வயசு ஆகுது.. இன்னும் 20ன்னு நெனச்சிட்டு இருக்காத.. அபிஷேக் சர்மாவுக்கு – ஏ.பி.டி அட்வைஸ் முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.

Thank You

Related Posts

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

April 20 Indraya Rasi Palan : இன்றைய ராசி பலன்கள் 20.04.2026 (திங்கள்கிழமை) – மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தினசரி பலன்களை இங்கே விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இன்று நண்பர்களிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள்…

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நியூ சண்டிகர் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 9 views
மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 10 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 7 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }