குரு பெயர்ச்சி பலன் 2024: 12 ஆண்டுக்குப் பின் ரிஷபத்தில் அமரும் குரு.. 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை அடி தூள் – Kumudam


குரு பெயர்ச்சி:  மே 1ஆம் தேதி நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களும், கடக ராசிக்காரர்களும் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.  கோச்சாரப்படி குரு பயணம் செய்யும் இடம் மற்றும் பார்க்கும் இடத்தைப் பொறுத்து நன்மைகள் நடைபெறும். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும் என்பதால்தான் குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்கின்றனர். குரு பகவான் ரிஷப ராசியில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியையும், ஏழாம் பார்வையாக விருச்சிகம் ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரம் ராசியையும் பார்க்கிறார்.  இந்த 5 ராசிக்காரர்களுக்கும் குரு தரப்போகும் யோகம் அவர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. 

மேஷம்: மேஷ ராசிக்கு இரண்டாம் வீடு வாக்கு ஸ்தானம், மேஷ ராசிக்காரர்களே.. 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் நிகழப்போகும் குரு பெயர்ச்சி மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது. பொருளாதாரத்தில் மேன்மை கிடைக்கும். பணம் பலவழிகளில் இருந்தும் வரப்போகிறது. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும்.  தன காரகன் தன ஸ்தானத்திற்கு வருவதால் பண வருமானம் கொட்டும். நல்ல வேலை கிடைக்கும். துன்பங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். மனநிலை உடல்நிலையில் நல்ல மாறுதால் ஏற்படும்.  குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறார் குரு பகவான். வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் குடும்பத்தோடு ஒன்று சேருவார்கள். வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். 

கடகம்: அஷ்டமத்து சனியால் கஷ்டப்பட்டாலும் லாப ஸ்தானத்திற்கு வரப்போகும் குருவின் பயணத்தால் செய்யும் தொழிலில் லாபம் வரும். மன அழுத்தம் நீங்கி தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப சூழ்நிலைகள் குதூகலமாக இருக்கும். பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.  சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குருபகவானால் பதவியில் முன்னேற்றம் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான காலகட்டமாகும். உங்கள் குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் ஏற்படும்.  வீடு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனமும் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கோடி கோடியாக செல்வம் தேடி வரப்போகிறது.  திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்:  குரு பகவான் விருச்சிக ராசிக்கு  7ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். ஏழாம் வீட்டில் இருந்து  குரு பகவான் நேரடியாக உங்கள் ராசியை பார்வையிடுவதால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும் பிரச்சினைகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குரு பகவான் நேர்மறை எண்ணங்களை அதிகரிப்பார். கஷ்டங்கள், பிரச்சினைகளில் இருந்து  உங்களை விடுவிக்கப் போகிறார். வியாழக்கிழமைகளில் குரு பகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மை அதிகரிக்கும்.

மகரம்: ஏழரை சனியில் பாத சனியால் சிரமப்பட்டு வருகிறீர்கள் மே மாதம் முதல் ஐந்தாம் இடமான பஞ்சம ஸ்தானத்திற்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடையப்போவதால்  நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.  பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் குல தெய்வ அருள் தேடி வரப்போகிறது. குருவின் அருள் பார்வை கிடைப்பதால் நீங்கள் தொட்டது துலங்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் தேடி வரும். வீடு மாற்றம் இட மாற்றம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்கு காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். 



Thank You

  • Related Posts

    குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: நிம்மதி.. சிம்ம ராசிக்காரர்களுக்கு மனசெல்லாம் மத்தாப்பு – Kumudam

    நிதானமாகச் செயல்பட்டா, நிம்மதி நிலைக்கும் ஆண்டுங்க. பணியிடத்துல உங்க திறமைக்கு ஏற்ப புதிய பொறுப்புகளை ஏற்கவேண்டி வரலாம்க. சக ஊழியர்கள் ஆதரவு சந்தோஷம் தரும்க. அதேசமயம் மறைமுக எதிரிகள் மேலிடத்துக்கும் உங்களுக்கும் இடையில சிண்டுமுடியலாம், கவனமா இருங்க. கோப்புகள் எதிலும் கையெழுத்திடும்…

    குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்காரர்களுக்கு கொட்டப்போகும் பண மழை – Kumudam

    கன்னி: அலுவலகத்துல அல்லவை நீங்கி நல்லவை அதிகரிக்கத் தொடங்கும்க. எட்டாக் கனியாக இருந்த பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடி வரும்க. மேலிடத்தால் உங்க திறமை உணரப்பட்டு பெருமை சேரும்க. உடன் பணிபுரியும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்க. தொடர் உழைப்புனால களைப்பு ஏற்பட்டாலும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

    • By admin
    • April 17, 2026
    • 6 views
    ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

    அமித் ஷாவின் 50% ஃபார்முலா: தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    • By admin
    • April 17, 2026
    • 5 views
    அமித் ஷாவின் 50% ஃபார்முலா: தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

    • By admin
    • April 17, 2026
    • 6 views
    Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

    ”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

    • By admin
    • April 17, 2026
    • 6 views
    ”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

    மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

    • By admin
    • April 17, 2026
    • 11 views
    மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

    கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

    • By admin
    • April 17, 2026
    • 9 views
    கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam
    .site-info { display: none; }