’அண்ணனைத் தொடர்ந்து களத்திற்கு வந்த தம்பி’ – வானதி சீனிவாசனுக்காக வாக்கு சேகரிக்கும் மகன்கள்

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனுக்குத் தேர்தல் பரப்புரையின் இடையே திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதன் காரணமாக வானதி சீனிவாசன் பரப்புரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால், வானதி சீனிவாசன் இறுதிக்கட்ட பரப்புரைகளில் மட்டுமே பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேட்பாளர் வானதி சீனிவாசன் இல்லாமலேயே, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கோவை வடக்கு தொகுதிக்குள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணாமலை உடன் வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ்

அண்ணாமலை உடன் வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ்

குறிப்பாக வானதி சீனிவாசனின் மூத்த மகன் ஆதர்ஷ் கடந்த சில நாட்களாக, கோவை வடக்கு தொகுதியில் நடைபெறும் பரப்புரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இணைந்து வீடு, வீடாக சென்று வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முதல் வானதி சீனிவாசனின் இளைய மகன் கைலாஷ், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சங்கனூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று கைலாஷ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது தனது தாயின் உடல் நிலை குறித்தும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குறுதிகளையும் கூறி கைலாஷ் ஆதரவு திரட்டினார். மேலும், ”அம்மா விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்காக வருவார். அதுவரை அவரது பிரதிநிதியாக நான் உங்கள் கதவுகளை தட்டுகிறேன்” என கூறினார்.

Thank You

Related Posts

வரையறை: "நாங்கள் நடத்த விடமாட்டோம்" – தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ்

எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளிடையே நாளை(ஏப்ரல்.16) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது. இதில் தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு திருத்த மசோதாக்களை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. மோடி, அமித்ஷா தொகுதி மறுவரையறை மூலம் தென்னிந்திய…

எழுத்தாளர் நிஜந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜந்தன் (31). இவர் ’பிறழ்’ என்ற சிறுவயது பாலியல் அத்துமீறல் காரணமாக அகச்சிதைவு ஏற்படும் ஒரு இளைஞன் எதிர்கொள்ளும் வலிகளை பேசும் குறுநாவல் மூலமாக கவனத்தைப் பெற்றவர். தொடர் வாசிப்பு மற்றும் எழுத்து என இலக்கிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

  • By admin
  • April 17, 2026
  • 6 views
Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

  • By admin
  • April 17, 2026
  • 5 views
”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 11 views
மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 9 views
கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

ஹாக்கி ‘எல் கிளாசிகோ’… இந்தியா – பாக்,. போட்டியை நேரில் காணும் ஸ்டாலின்!

  • By admin
  • April 17, 2026
  • 9 views
ஹாக்கி ‘எல் கிளாசிகோ’… இந்தியா – பாக்,. போட்டியை நேரில் காணும் ஸ்டாலின்!

Hit Songs: மனோரமா பாடிய டப்பாங்குத்து பாடல்கள்.! சென்னை தமிழில் பாட்டுப்பாடி மனசை மயக்கிய ராட்சசி! | Hit Songs Dappankuthu Songs Sung By Manorama The Enchanting Diva Who Mesmerized Hearts With Chennai Tamil

  • By admin
  • April 17, 2026
  • 14 views
Hit Songs: மனோரமா பாடிய டப்பாங்குத்து பாடல்கள்.! சென்னை தமிழில் பாட்டுப்பாடி மனசை மயக்கிய ராட்சசி! | Hit Songs Dappankuthu Songs Sung By Manorama The Enchanting Diva Who Mesmerized Hearts With Chennai Tamil
.site-info { display: none; }