ரேஷன் கடையில் இளம் பெண்ணிடம் சில்மிஷம்: கடை ஊழியர் கைது – Kumudam

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண் ஒருவர் மாதவரம் ராஜாஜி தெருவில் உள்ள நியாய விலைக் கடையில் நேற்று பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கடை ஊழியர் இளம்பெண்ணை கைரேகை வைக்குமாறு கூறியதன் பேரில் அவரும் கைரேகை வைத்துள்ளார். அப்போது கைரேகை வேலை செய்யவில்லை என கூறிய ரேஷன் கடை ஊழியர் இளம்பெண்ணை கிட்ட அழைத்து அங்குள்ள பயோ மெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை மற்றும் கருவிழியை பதிவு செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

உடனே இளம்பெண்ணும் அருகே சென்று ரேஷன் கடை ஊழியர் கூறியது போல் செய்து கொண்டிருந்த போது திடீரென ரேஷன் கடை ஊழியர் இளம்பெண்ணிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனே பயந்துபோன இளம்பெண் கடையில் இருந்த வெளியே ஓடிவந்து தனது கணவருடன் தகவல் தெரிவித்துள்ளார்.

மனைவி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் உடனே ரேஷன் கடைக்கு ஓடிவந்து கடை ஊழியரை பிடித்து தர்ம அடிக்கொடுத்து மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை அடுத்த நன்மங்கலம் கோவில் பதாகை பகுதியை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் நல்லதம்பி (56) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Thank You

Related Posts

ஆணவக்கொலைகள் தடுக்க சட்டம், மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு  : விசிக தேர்தல் அறிக்கை  – Kumudam

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. இந்த நிலையில், சென்னையில் உள்ள விசிக அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு மரியாதை செலுத்திய அக்கட்சியின் தலைவர் தொல்.…

பழைய திமுகவை இந்தியா திரும்ப பார்க்க வேண்டியிருக்கும்: பாஜகவிற்கு ஸ்டாலின் எச்சரிக்கை  – Kumudam

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்; நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருவதற்கே நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாடு, மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான தண்டனை தொகுதி மறுவரையறையா? எந்த மாநிலத்துடனும் ஆலோசனை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

  • By admin
  • April 17, 2026
  • 5 views
Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

  • By admin
  • April 17, 2026
  • 4 views
”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 11 views
மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 9 views
கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

ஹாக்கி ‘எல் கிளாசிகோ’… இந்தியா – பாக்,. போட்டியை நேரில் காணும் ஸ்டாலின்!

  • By admin
  • April 17, 2026
  • 9 views
ஹாக்கி ‘எல் கிளாசிகோ’… இந்தியா – பாக்,. போட்டியை நேரில் காணும் ஸ்டாலின்!

Hit Songs: மனோரமா பாடிய டப்பாங்குத்து பாடல்கள்.! சென்னை தமிழில் பாட்டுப்பாடி மனசை மயக்கிய ராட்சசி! | Hit Songs Dappankuthu Songs Sung By Manorama The Enchanting Diva Who Mesmerized Hearts With Chennai Tamil

  • By admin
  • April 17, 2026
  • 14 views
Hit Songs: மனோரமா பாடிய டப்பாங்குத்து பாடல்கள்.! சென்னை தமிழில் பாட்டுப்பாடி மனசை மயக்கிய ராட்சசி! | Hit Songs Dappankuthu Songs Sung By Manorama The Enchanting Diva Who Mesmerized Hearts With Chennai Tamil
.site-info { display: none; }