ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. எனவே இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றிற்கான வாய்ப்பு உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்கிற நிலையில் சென்னை அணி போராடி வருகிறது.
மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்த ருதுராஜ் கெய்க்வாட் :
இந்நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதியான இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது சி.எஸ்.கே அணி விளையாடி வருகிறது. இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் மோசமான ஃபார்ம் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்த தொடரின் முதல் போட்டியில் 6 ரன்களை அடித்த அவர் இரண்டாவது போட்டியின் போது 28 ரன்களை குவித்தார். மூன்றாவது போட்டியில் 7 ரன்கள் எடுத்த அவர் நான்காவது போட்டியில் 15 ரன்கள் குவித்தார். இப்படி முதல் நான்கு போட்டியில் பெரியளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத அவர் இன்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலாவது நல்ல ரன் குவிப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்றைய போட்டியில் வெறும் 6 பந்துகளை மட்டுமே சந்தித்தது 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் இந்த 2026 ஐ.பி.எல் தொடரின் முதல் 5 ஆட்டங்களில் அவர் வெறும் 12 ரன்கள் சராசரியுடன் 105 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 63 ரன்கள் மட்டுமே குவித்து ஏமாற்றம் அளித்துள்ளார். இப்படி ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் பார்ம் மோசமாக இருப்பதை தொடர்ந்து அவரது இடத்தின் மீதான விமர்சனமும் தற்போது அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : மீண்டும் ஒருமுறை சி.எஸ்.கே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்த தல தோனி.. என்ன நடந்தது? – விவரம் இதோ
ஏனெனில் ஒருபுறம் ருதுராஜ் கெய்க்வாட் சொதப்பி வரும் வேளையில் ஆயுஷ் மாத்ரே மிகச் சிறப்பான பார்மில் அதிரடியாக விளையாடி வருகிறார். எனவே பார்மின்றி தவிக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக சஞ்சு சாம்சனுடன் ஆயுஷ் மாத்ரே துவக்க வீரராகவும், மூன்றாவது இடத்தில் ருதுராஜ் களமிறங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
பதவி 5 போட்டி.. 63 ரன்ஸ்.. 105 ஸ்ட்ரைக் ரேட்.. விமர்சனத்துக்கு உள்ளான ருதுராஜ் கெய்க்வாட்டின் இடம் – விவரம் இதோ முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.