தமிழ் சினிமாவின் தற்போதைய சாக்லேட் பாய் என்று அழைக்கப்படும் ஹரிஷ் கல்யாண், சமீப காலமாக மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து போன்ற படங்களின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் தற்போது நடித்து வரும் 15-வது திரைப்படம் தாஷமக்கான். இப்படத்தின் முதல் பாடலான ராப் பேட்டில் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராப் இசை பின்னணியில் ஒரு ஆக்சன் களம்
லிப்ட் படத்தின் இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படம், வடசென்னையின் பின்னணியில் ராப் இசை கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஒரு ராப் பாடகராக நடிக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. வழக்கமான காதல் கதைகளில் இருந்து விலகி, ராப் இசையையும் ஆக்சனையும் கலந்து ஒரு புதுமையான முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.
மேலும் படிக்க: சேயோன் படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
எங்களின் முதல் சிங்கிள் #RapBattle இருந்து #தசமகன் இப்போது வெளியே உள்ளது
ஹார்ட்-கோர் ராப் பிளாஸ்ட் இங்கே உள்ளதுதமிழ்: https://t.co/zgOHzKqYy6
தெலுங்கு: https://t.co/CLqlT3aUbSஅன்று @tseriessouth YouTube
இசை – @வில்பிரிட்ஸ்
ஸ்வாக் – @iamharishkalyanதயாரித்தவர் – @ThinkStudiosInd… pic.twitter.com/UTwnfIeWX7
— திங்க் ஸ்டுடியோஸ் (@ThinkStudiosInd) பிப்ரவரி 17, 2026
பாடல் எப்படி இருக்கிறது?
நேற்று பிப்ரவரி 17 வெளியான இந்த ராப் பேட்டில் பாடல், கேட்போரை துள்ளல் போட வைக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ள இப்பாடலை மெக் ரூட், எம்ஜே சூர்யா, ஸ்மைல் டூபாகீஸ் மற்றும் விஜய் சாண்டி உள்ளிட்ட பல ராப் கலைஞர்கள் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளும், இசையும் வடசென்னையின் துடிப்பான ராப் கலாச்சாரத்தை கண்முன் நிறுத்துவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஹரிஷ் கல்யாணின் எனர்ஜியான நடிப்பு இப்பாடலுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
நட்சத்திர பட்டாளம்
இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ் மற்றும் சுனில் ஆகியோர் நடிக்கின்றனர். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்ய, ஜி மதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் இடா புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றன.
வடசென்னை டூ தாஷமக்கான்
தாஷமக்கான் என்பது சென்னையில் உள்ள ஒரு பிரபலமான இடத்தின் பெயர். தமிழ்நாட்டிற்கு கறி சப்ளை செய்யும் இடமாக அறியப்படும் இந்த பகுதியின் பெயரை படத்திற்கு வைத்திருப்பது கதைக்களத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஹரிஷ் கல்யாண் தனது பேட்டியில், தமிழில் ராப் இசைக்கு ஒரு பெரிய வரலாறு உள்ளது. பல சுயாதீன கலைஞர்கள் இதில் சாதித்து வருகின்றனர். அவர்களுக்கு சமர்ப்பணமாக இப்படம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
ரிலீஸ் அப்டேட்
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டீசர் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரிஷ் கல்யாணின் முந்தைய படமான டீசல் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தாஷமக்கான் அவருக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை தேடித் தரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: நடிகை பிரத்யுஷா மரண வழக்கு: 24 ஆண்டுகளுக்கு பின்..உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android இணைப்பு: https://bit.ly/3AIMb22
ஆப்பிள் இணைப்பு: https://apple.co/3yEataJ