திமுக தேமுதிக கூட்டணியின் சமீபத்திய செய்திகள்: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகம் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என நாக்கு முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தேமுதிக வரும் தேர்தலில் எந்த கூட்டணியில் இணையும் என கேள்வி எழுப்பப்பட்டே இருந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.
திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக
அதாவது, தேமுதிக இன்று (பிப்ரவரி 19) அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்துள்ளார். அப்போது, அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி எம்.பி ஆகியோர் உடன் இருந்தனர். தேமுதிக திமுக கூட்டணியில் இருந்து பெரும் ட்விஸ்டை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக கூட்டணியில் தான் இணையும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென திமுக பக்கம் பிரேமலதா சாய்ந்துள்ளார். இது பெரிதும் முக்கியத்தும் பெறுகிறது.
திமுகவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம். விஜயகாந்த் இருந்தவரை, திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. 2011ஆம் ஆண்டு எதிர்க்கட்சியாக உயர்ந்த தேமுதிக, அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்விகளை மட்டுமே சந்தித்தது. 2016ம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் களம் கண்டு தோல்வியை கண்டது. 2021ஆம் ஆண்டு அமமுக, எஸ்டிபிஐ கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. ஆனால், அந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. ஆனால், வெற்றி என்பது தேமுதிகவுக்கு குறைவு தான். இந்த நிலையில், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என கேள்வி எழுந்தது.
பின்னணி என்ன?
திமுக, அதிமுக என இரண்டு தரப்பிடமும் தேமுதிக பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது. ஆனால், நாங்கள் யாரிமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பிரேமலதா கூறி வந்தார். அதிமுக கூட்டணியில் இருந்த கடந்த லோக்சபா தேர்தலில் இருந்த அதிமுகவுக்கு, ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க உறுதி அளிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால், தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை. இதனால், தேமுதிக அதிருப்தியில் இருந்தது. இதனால், இந்த தேர்தலில் திமுக, அதிமுக என இருகட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தியது. குறிப்பாக, திமுகவின் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் பேச்சுவார்த்தையில் தேமுதிகவிடம் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கு மத்தியில் கோவையில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், எ.வ.வேலுவின் தொடர் முயற்சியின் காரணமாக, திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதே நேரத்தில், ராஜ்யசபா சீட்டிற்கும் திமுக ஒப்புக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்திருக்கலாம். எனவே, வரும் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ரூ.5000 வரவில்லையா? பெண்கள் 3 விஷயங்களை சரிபார்க்கவும்
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் : மாவட்ட ஆட்சியர்களிடம் குவியும் மனுக்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android இணைப்பு: https://bit.ly/3AIMb22
ஆப்பிள் இணைப்பு: https://apple.co/3yEataJ