Flash News

7 வருஷமா உசுர குடுத்து விளையாடுறன்.. அபிஷேக் சர்மாவுக்கு நடந்தது அநீதி – யுவ்ராஜ் சிங் சாடல்


இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19 சீசனானது கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக இடம்பெற முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பேட் கம்மின்ஸும் காயம் காரணமாக இந்த தொடரின் முதல் பாதியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. அதோடு இந்த தொடரின் இரண்டாம் பாதியில் அவர் மீண்டும் கேப்டனாக அணிக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

அபிஷேக் சர்மாவுக்கு தான் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கனும் : யுவ்ராஜ் சிங்

இதன் காரணமாக முதல் பாதி தொடருக்கான சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இளம் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன் அந்த அணியின் நிர்வாகம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் முதல் போட்டியில் அந்த அணி பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்திருந்த வேளையில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று தங்களது முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்தது.

பேட் கம்மின்ஸ் இப்படி காயம் காரணமாக முதல் பாதியில் பங்கேற்காத வேளையில் அவருக்கு பதிலாக யார் கேப்டனாக நியமிக்கப்படுவார்? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் உள்ளூர் போட்டிகளில் ஜார்கண்ட் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு அந்த அணியை சையத் முஷ்டாக் அலி தொடரில் வெற்றிபெற செய்த இஷான் கிஷனுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இப்படி இஷான் கிஷன் மிகச்சிறப்பான ஃபார்மில் இருக்கும்போது அவரை கேப்டனாக நியமித்தது சரிதான் என்று பலரும் கூறி வந்தாலும் சிலர் இஷான் கிஷனை தாண்டி வேறொரு கேப்டனை நியமித்துக் இருக்கலாம் என்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் தற்போது பிரத்யேக நேர்காணல் ஒன்றில் கலந்து கொள்கையில் : இஷான் கிஷனை தாண்டி அபிஷேக் ஷர்மாவிற்கு தான் கேப்டன் பதவி வழங்கியிருக்க வேண்டும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : அபிஷேக் ஷர்மா சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் கடந்த ஏழு ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவை தாண்டி விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ள பாக் வீரர் பர்ஹான் – விவரம் இதோ

அந்த அணிக்காக தனது உடல், ஆத்மா என அனைத்தையும் வழங்கி மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. மாநில அளவிலான போட்டிகளில் ஏற்கனவே அபிஷேக் சர்மா கேப்டனாக இருந்துள்ளார். ஆனால் இன்றளவும் அவருக்கு சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவி கிடைக்காதது தனக்கு வருத்தம் என்று யுவராஜ் சிங் குறிப்பிடத்தக்கது.

பதவி 7 வருஷமா உசுர குடுத்து விளையாடுறன்.. அபிஷேக் சர்மாவுக்கு நடந்தது அநீதி – யுவ்ராஜ் சிங் சாடல் முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.



Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *