– விளம்பரம் –
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் அணியானது 65 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
கொல்கத்தா அணியை வீழ்த்த இதுவே காரணம் : இஷான் கிஷன் பேட்டி
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய அடுத்ததாக விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது. பின்னர் 227 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 161 ரன்களுக்கு சுருண்டதால் 65 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
– விளம்பரம் –
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் இஷான் கிஷன் கூறுகையில் : இந்த போட்டியில் எனது என்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தை விட அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பான செயல்பாட்டை களத்தில் வெளிப்படுத்தியதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி.
பவர்பிளே ஓவர்களில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் கொடுத்த அதிரடியான துவக்கம் எங்களது ஆட்டத்தை மேலும் எளிதாக்கியது. ஏனெனில் அவர்கள் அதிரடியாக போட்டியை துவங்கியதால் மற்ற பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தை புரிந்து கொள்ள கூடுதல் நேரம் கிடைத்தது. இறுதியில் கிளாசன் மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : எங்க அப்பா பேசுறதில் எனக்கு சுத்தமா உடன்பாடு இல்லை.. தோனி மற்றும் கப்பிலிடம் மன்னிப்பு கேட்ட – யுவ்ராஜ் சிங்
அதேபோன்று பந்துவீச்சில் ஷிவாங் குமார் சிறப்பாக செயல்பட்டிருந்தார். மேலும் ஹரிஷ் துபேவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு தேவைப்படும் நேரத்தில் விக்கெட் வீழ்த்தியிருந்தார். இந்த போட்டியில் 10 முதல் 20 ரன்களை நாங்கள் பீல்டிங்கில் தடுத்திருக்க வேண்டும். இந்த போட்டியில் பீல்டிங் மோசமாக இருந்தது நிச்சயம் அதில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்