Flash News

தொடக்க தேதி அறிவிப்பு; ஆர்.சி.பி ரசிகர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்


இந்தியன் பிரீமியர் லீக்கின் 2026-ம் ஆண்டு தொடரின் தொடக்க தேதி சனிக்கிழமை மார்ச் 28-ம் தேதி அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் மற்றும் பல உரிமையாளர்களால் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், கால அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆங்கிலத்தில் படிக்க:

மேற்கு வங்கம், அசாம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வரை பி.சி.சி.ஐ காத்திருப்பதால், போட்டிகளுக்கான அட்டவணையை இரண்டு கட்டங்களாக வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. முதல் கட்டப் போட்டிகளுக்கான அட்டவணை மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இந்த 3 மாநிலங்களில் தேர்தல் தேதிகள் நிர்ணயிக்கப்பட்ட பிறகு இரண்டாம் கட்டம் அறிவிக்கப்படும்.

கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியனாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கடந்த ஆண்டு தனது முதல் ஐ.பி.எல் பட்டத்தை வென்ற அடுத்த நாள் 11 பேர் உயிரிழந்த எம். சின்னசாமி மைதானத்தில் தங்களின் சொந்த ஊர் போட்டிகளை விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், நடப்பு சாம்பியன்கள் அந்த மைதானத்தில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள் மற்றும் அவர்களின் மீதமுள்ள இரண்டு போட்டிகளை ராய்ப்பூரில் விளையாடுவார்கள்.

“ரசிகர்களுக்காக விளையாட்டுகளை மீண்டும் சொந்த மைதானத்திற்கு கொண்டு வரும் பொதுவான குறிக்கோளுடன், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் பல மாத கால கடின உழைப்பு மற்றும் நெருக்கமான ஒருங்கிணைப்புக்கு பிறகு இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” என்று ஆர்.சி.பி ஒரு வெளியீட்டில் தெரிவித்தது. “பெங்களூருவில் போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக தடையற்ற வழிகாட்டுதல், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை வழங்கிய கர்நாடக அரசு, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் கர்நாடக காவல்துறைக்கு ஆர்.சி.பி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.”

“ஐ.பி.எல் சீசனுக்கு முன்னதாகவே உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள், நடப்பு சாம்பியன்கள் தங்களின் பெரும்பான்மையான ஹோம் மேட்ச் போட்டிகளைத் தங்கள் சொந்த மைதானத்திலேயே விளையாடுவதை உறுதி செய்துள்ளன,” என்று அணி நிர்வாகம் தெரிவித்தது.





Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *